shadow

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் யோகரத்தினம் காலமானார்
saravana stores
சென்னையில் பிரபலமாக உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் யோகரத்தினம் இன்று காலமானார். மிகவும் வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்த யோகரத்தினம் சென்னையில் சிறிய அளவில் வணிகம் தொடங்கி இன்று சென்னையிலேயே மிகப்பெரிய நுகர்வோர் பொருட்களின் மையம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘சரவணா ஸ்டோர்ஸ் என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கி விற்பனை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர் யோகரத்தினம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியிருக்கும் பெருமையையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்ததோடு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் அளவிற்கு வரலாறு படைத்திருக்கக் கூடிய சாதனைக்கு சொந்தக்காரராக விளங்கி வந்த யோகரத்தினம் அவர்களது மறைவு வணிகத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பாக கருதப்படுகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் யோகரத்தினம் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வணிக சங்கங்களின் பிரதிநிதிகள் வரை தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply