shadow

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்குடன் புதிய மனு இணைக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
supremecourt
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தற்போது டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், வழக்குரைஞர் கட்டாரியா தாக்கல் செய்த மனு ஒன்று இந்த வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டோ அல்லது சுப்ரீம் கோர்ட்டோ விசாரிக்க முடியாது என்று கூறி வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை மறு சீராய்வு மனுவாக மட்டுமே கர்நாடக ஐகோர்ட் விசாரித்திருக்க முடியும் என்றும் மேல்முறையீட்டு வழக்காக சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க முடியாது என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இந்த புதிய மனு சொத்துக்குவிப்பு வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் தேர்தலுக்குள் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடுமா? என்பதை அறிவதிலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply