shadow

ரூபா ஐபிஎஸ் வகித்த பதவிக்கு ஹெச்.எஸ். ரேவண்ணா நியமனம்

சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ பல்வேறு சலுகைகள் செய்ததாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா அவர்கள் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் வகித்த வந்த பதவிக்கு தற்போது ரேவண்ணா ஐ.பி.எஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு சாலை மற்றும் போக்குவரத்துத்துறைக்கு கமிஷனராக அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ரூபா அவர்கள், சசிகலா பெற்ற சலுகைகளை ஆதாரத்துடன் வெளியே கொண்டு வந்தார். அவர் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கர்நாடக அரசு ரூபாவை பணியிட மாற்றம் செய்தது. இதனால் கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் தோன்றின

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறையின் புதிய டிஐஜி-யாக ஹெச்.எஸ். ரேவண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கூடுதல் பொறுப்பாக இவர் பெங்களூரு மத்தியச் சிறையான பரப்பன அக்ரஹாரா சிறையையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply