’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் குணமாகி வீடு திரும்பியதும் முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பு இருக்காது என்றும் குறிப்பாக இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று பின்னி மில்லில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இதனையடுத்து பின்னி மில்லில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. அங்கு 50க்கும் மேற்பட்ட கார்கள் மோதும் காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.