விடுமுறை முடிந்து பணியில் சேர 450 கிலோ மீட்டர் நடந்து சென்ற காவலர்

விடுமுறை முடிந்து பணியில் சேர 450 கிலோ மீட்டர் நடந்து சென்ற காவலர்

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திக்விஜய் சர்மா என்ற இளைஞர் சமீபத்தில் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்தார். இவர் மீண்டும் பணியில் சேர்வதற்கு முன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

இருப்பினும் பணியில் சேர வேண்டும் என்பதற்காக சொந்த ஊரில் இருந்து உத்தரபிரதேசம் வரை 450 கிலோ மீட்டர் நடந்தே சென்று மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்

வழியில் அவருக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் உணவு தண்ணீர் கொடுத்து உதவி செய்துள்ளனர். ஒரு சிலர் சில கிலோ மீட்டர் தூரம் வரை தங்களது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பணியில் சேர்வதற்கான 450 கிலோ மீட்டர் நடந்து வந்த காவலரை போலீஸ் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். இருப்பினும் அவருக்கு கால்களில் புண் ஏற்பட்டுள்ளதால் ஒரு சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.