shadow

 dhanshika 1எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை’ என்ற வெற்றி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை தன்ஷிகா அதன் பின்னர் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் ‘பரதேசி’ படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது ‘திறந்திடு சீசே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரது கேரக்டரின் பெயர் சார்மி.

இந்த படத்தின் கதைப்படி சார்மி சென்னையில் உள்ள ஒரு மிகவும் புகழ்பெற்ற பப்பிற்கு சென்றிருந்தபோது அங்கு நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர்களை சார்மி எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது.

சார்மி கேரக்டரில் நடித்துள்ள நடிகை தன்ஷிகா தனக்கு கிடைத்த இந்த கேரக்டர் மிகவும் போல்டானது என்றும், இந்த படத்தில் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் டூப் இன்றி நடித்துள்ளதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுதாஸ் புரொக்ட்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை எம்.நிமிஸ்வர்ஷன் இயக்கி வருகிறார்.

dhanshika

Leave a Reply