கூட்டமாக கூடியவர்களை கலைந்து போக சொன்ன போலீஸ்

விரட்டி விரட்டி அடித்த பொதுமக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நிற்கக்கூடாது என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுரா அருகிலுள்ள ஒரு பகுதியில் பொதுமக்கள் சிலர் நூற்றுக்கணக்கில் கூட்டமாக நின்றனர்

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறினார். இதுகுறித்து வாக்குவாதம் நடந்த திடீரென கலவரம் ஏற்பட்டு பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறிய போலீசார்களை விரட்டி விரட்டி பொதுமக்கள் அடிக்கத் தொடங்கினார்கள்

கல்லாலும், கட்டையாலும் பொதுமக்கள் அடிக்க தொடங்கியதை பார்த்தவுடன் போலீசார் பயந்து ஓடிவிட்டனர் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

Leave a Reply