shadow

டைட்டில் மாறும் பத்மாவதி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படம் ஒருவழியாக தணிக்கைக் குழுவிடம் சான்றிதழை வாங்கியுள்ளது. இந்த படத்திற்கு மத்திய தணிக்கைக் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

சாஹித் கபூர், தீபிகா படுகோன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளப் படம் ‘பத்மாவதி. இப்படத்தில் ‘ராஜ்புட்’ என்ற குறிப்பிட்ட சமூகத்தவரை இழிவுப்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இந்துத்துவ அமைப்புகளும், பாஜகவினரும் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் இப்படத்தை வெளியிடுவதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், பத்மாவதி படம் தணிக்கைக் குழுவுக்குத் திரையிடப்பட்டது. படம் தொடர்பான சிக்கல்களை அறிந்த தணிக்கைக் குழுவினர் ஒரு சிறப்புக் குழுவை ஆலோசனைக்காக வைத்திருந்தனர்.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும், படக்குழுவினருக்கு ஒரு சில பரிந்துரைகளை வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக, ‘பத்மாவதி’ என்ற பெயரை ‘பத்மாவத்’ என்று மாற்றுமாறு பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply