ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

ஊரடங்கு உத்தரவு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்

மிக அதிகமாக கொரோனா பரவி வருவதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக சமூக ஊடகங்களிலும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன

இந்த நிலையில் ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.