shadow

புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு: அமீர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு

புதியதலைமுறை தொலைக்காட்சி சார்ப்பில் அவ்வப்போது வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த விவாத நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி தலைவரகள் தங்கள் கருத்தை பேசி விவாதம் செய்வார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் உள்பட ஒருசிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாத நிகழ்ச்சி குறித்து புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புதிய தலைமுறை, செய்தியாளர் சுரேஷ்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஜனநாயகத்தை கேள்விக்குறிக்கு உள்ளாக்கும் செயல் என்று திண்டுக்கல் பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தவுள்ளதாக தலைமைச்செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய தலைமுறை,செய்தியாளர் மீதான வழக்குப்பதிவு ஜனநாயக விரோத செயல் என்று தேனி பிரஸ் யூனியனும், இது ஊடகங்கள், பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் செயல் என்று முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

Leave a Reply