shadow

12சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்து கடந்த வாரம் வெளியான “மான் கராத்தே” படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தமிழகமெங்கும் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை தந்துகொண்டிருக்கும் “மான் கராத்தே” படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் “படத்தின் பெயரான “மான் கராத்தே” என்ற பெயர் தமிழ்ப்பெயர் இல்லை. மேலும் இந்த படத்தில் நாயகன் மது அருந்துவது போன்று பல காட்சிகள் இருக்கின்றது. எனவே இந்த படத்திற்கு 30% வரிவிலக்கு அளித்தது பொருந்தாது என்றும், தமிழக அரசு இந்த படத்திற்கு கொடுத்த வரிவிலக்கை ரத்து செய்துவிட்டு அதற்குரிய வரியை வசூல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் தமிழின் மிகத்தொன்மையான புனித நூலான திருக்குறளை கேலி செய்வது போன்று காட்சிகள் உள்ளது என்று தமிழ் அமைப்புகள் புகார் கூறியுள்ளன. இதனால் இந்த படத்தை தடைசெய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன. ஒரே நேரத்தில் இரண்டுவித புகார்கள் படத்தின் மீது எழுந்துள்ளதால் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply