டெல்லியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு: சரியான நேரத்தில் செயலிழக்க செய்ததால் விபரீதம் தவிர்ப்பு

டெல்லியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டதால் மிகப்பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

டெல்லியில் உள்ள பழைய சீமாபுரி என்ற பகுதியில் 3 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அந்த வெடிகுண்டு உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் செய்தி கூறுகின்றது.

இந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் சரியான நேரத்தில் செயலிழக்க செய்ததால் விபரீதம் தவிர்ப்பு என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்,

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.