shadow

பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

ram jethmalaniஜெயலலிதா, கனிமொழி உள்பட பல விவிஐபிக்களுக்காக வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உள்ளது. இந்த படத்தில் ராம்ஜெத்மலானி வேடத்தில் அமிதாப் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்தியாவின் திறமையான சீனியர் வழக்கறிஞர், முன்னாள் மத்திய அமைச்சர் உள்பட பல புகழாரங்களை பெற்ற ராம்ஜெத்மலானி ஒரு நாளுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவர்.

இந்நிலையில் இவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்மான சம்பவங்களை தொகுத்து இந்தியில் படமெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ரோணி, குணால் ,நடிகை சோகா அலிகான் ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

சமீபத்தில் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெற்றி பெற்றதுபோல் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply