கமல்ஹாசனுக்கு திடீர் தடை: தமிழக அரசின் நடவடிக்கையா?

கமல்ஹாசனுக்கு திடீர் தடை: தமிழக அரசின் நடவடிக்கையா?

08உலக நாயகன் கமல்ஹாசன் இன்று மதுரையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவித்து கட்சி கொடியையும் ஏற்றவுள்ளார். இதற்காக அவர் நேற்றே மதுரை சென்றுள்ளார்.

இந்த நிலையில் அதற்கு முன்பாக இராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கல்வி கற்ற பள்ளிக்கு செல்ல கமல் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கூடத்திற்குள் கமல்ஹாசன் வருவதற்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்கு வருவதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு பின்னால் தமிழக அரசு இருப்பதாக கமல் தரப்பினர் கூறி வருகின்றனர்.

Leave a Reply