சென்னை அண்ணா சாலையில் பயங்கர விபத்து: கணவர் கண்முன்னே மனைவி பரிதாப பலி!

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் 59 வயது பெண் ஒருவர் தனது கணவர் கண் முன்னே மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தி நகரை சேர்ந்த சூரியநாராயணன் என்பவரும் அவருடைய மனைவி எழிலரசி என்பவரும் அண்ணாசாலையில் ஜெமினி பாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது சூரியநாராயணன்-எழிலரசி சென்ற இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. அப்போது வலது பக்கமாக கீழே விழுந்த எழிலரசி மீது பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று ஏறியதால் சம்பவ இடத்திலேயே 52 வயது எழிலரசி மரணமடைந்தார் சூரியநாராயணனுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டது

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து எழிலரசியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் குறிப்பாக பெண்களை பின்னால் வைத்து வாகனம் ஓட்டுபவர்கள் மிகுந்த கவனத்துடன் மிதமான வேகத்தில் செல்ல வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *