அடப்பாவிகளா! மூளைக்காய்ச்சல் பரவுவது இதனால்தானா?

அடப்பாவிகளா! மூளைக்காய்ச்சல் பரவுவது இதனால்தானா?

பீகாரில் கடந்த சில நாட்களில் மூளைக்காய்ச்சல் பரவி 100க்கும் அதிகமானோர் பலியான அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ள நிலையில் இந்த காய்ச்சல் லிச்சி பழம் என்ற பழத்தால் பரவுவதாக சொல்லப்பட்டது.

இயற்கையாக இருக்கும் லிச்சி பழத்தில் கண்ணை கவரும் வகையில் வண்ணம் பூசுவதால், அந்த வண்ணத்தில் உள்ள கெமிக்கல் காரணமாக இந்த காய்ச்சல் பரவுவதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் டுவிட்டரில் இதுகுறித்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு வியாபாரி இளம்பச்சை நிறத்தில் இருக்கும் லிச்சி பழத்தில் சிவப்பு நிற வர்ணத்தை ஸ்ப்ரே செய்கிறார். அந்த நபரை கண்டுபிடித்த அந்த பகுதி மக்கள் திட்டி தீர்க்கின்றனர். இதுபோன்ற செயல்களால்தான் மூளைக்காய்ச்சல் பரவுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்

Leave a Reply