shadow

ஒரே நாளில் ரூ.9,806 கோடியை இழந்த கார் பஞ்சாப் ஓட்டுநர்

1பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பல்வீந்தர் சிங் என்பவருக்கு சொந்தமான “ஜன் தன்” வங்கிக் கணக்கில் ரூ.200 மட்டுமே நேற்று முந்தைய நாள் வரை இருந்தது. ஆனால் திடீரென நேற்று ரூ.9,805 கோடி ரூபாய்க்கும் மேல் டெபாசிட் ஆனது. இதனால் வங்கி அதிகாரிகள் பரபரபரப்பு அடைந்தனர்.

கருப்பு பணம் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில் மர்ம நபர்கள் கருப்புப்பணத்தை பல்வீந்தர் சிங்கின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் வங்கி அதிகாரிகள் அவரது வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது வங்கி ஊழியர் ஒருவர் வங்கியின் கணக்கு எண்ணை தவறாக பதிவு செய்துவிட்டதாகவும் 98059512,231 என்ற கணக்கு எண்ணை ரூபாய் பதிவு செய்யும் இடத்தில் போட்டுவிட்டதால் அது 9805 கோடிரூபாயாக காண்பித்ததாகவும், அதன் பின்னர் இந்த தவறு நீக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய பாஸ் புக் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

ஒரே நாளில் 9805 கோடிக்கு சொந்தக்காரராகி பின்னர் அதே நாளில் அந்த தொகையை பல்வீர்சிங் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *