9 வயது சிறுமிக்கு காதுக்கு பதில் தொண்டையில் சர்ஜரி: சென்னையில் பரபரப்பு

சென்னையில் உள்ள 9 வயது சிறுமி ஒருவருக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் காதுக்கு பதில் தொண்டையில் சர்ஜரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் 9 வயது சிறுமிக்கு காதில் சின்ன கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து சிறுமி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதை கண்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதே மருத்துவமனையில் வேறு ஒரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய தொண்டையில் கட்டி சர்ஜரியை இந்த சிறுமிக்கு செய்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். இந்த தவறான சர்ஜரியால் வருங்காலத்தில் சிறுமிக்கு தொண்டையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வைத்த கோரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வழங்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது

Leave a Reply