9 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறையா?

9 மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இந்த 9 மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

மிக கனமழை என்றால் சில மணி நேரங்களில் 11 செ.மீ முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மாற்று இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

மிக கனமழைக்கு வாய்ப்பு என கூறப்பட்ட 9 மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply