பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.

8 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாரச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.

ஆடுகளின் விலை இந்தாண்டு உயர்ந்ததால், வழக்கத்தை விட விற்பனை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.