8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளித்த அமைச்சர் செங்கோட்டையன்

இன்று காலை வெளியான தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்றும் 30 மதிப்பெண்களுக்கு, முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

இதனால் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்றும் பருவத் தேர்வு முறையை ரத்து குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்

Leave a Reply