shadow

8ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாய பாடமா?

நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை ஹிந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹிந்தியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் தமிழக மக்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆனால் 8 வகுப்பு வரை ஹிந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு. இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அப்படி ஒரு திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘இந்தி உள்பட எந்த மொழியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று புதிய வரைவுக்கொள்கையில் இல்லை. தவறான, விஷமத்தனமான கருத்துக்கள் சில ஊடகங்களில் பரவுவதால் இந்த விளக்கம் அவசியமாகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply