shadow

இந்திய ஆன்மீக குருவுக்கு நியூயார்க் பக்தர்கள் செய்த உலக சாதனை

2இந்திய ஆன்மிக குருவான சின்மயா குமார் கோஸ் அவர்களின் 85வது பிறந்தநாளை முன்னிட்டு, நியூயார்க் நகரில் உள்ள அவரது சீடர்கள் பிரமாண்டமான கேக் மீது 72 ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஏற்றி உலக சாதனை செய்துள்ளனர்.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடிபெயர்ந்த இந்திய ஆன்மிக குருவான சின்மயா குமார் கோஸ் நியூயார்க்கில் தியானம் மற்றும் யோகா பயிற்சிகளை அந்நாட்டு மக்களுக்கு கற்றுக்கொடுத்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 2007ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அவரது 85வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 27-ம் தேதி நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கின்னஸ் உலக சாதனை நாயகனான 61 வயது அஷ்ரிதா பர்மன் மற்றும் சின்மயாவின் சீடர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் 45 அடி நீளம் மற்றும் 10 அடி அகலம் கொண்ட கேக்கின் மீது ஒரே நேரத்தில் 72 ஆயிரம் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இந்த மெழுகுவர்த்திகளை எண்ணி கேக்கில் சொருகும் பணியில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இது உலக சாதனையாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்பு, பர்மன் 48 ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஏற்றி சாதனை படைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 50 ஆயிரம் மெழுகு வர்த்திகளை ஏற்றிய மற்றொரு குழுவினர் இந்தச் சாதனையை முறியடித்தனர். இப்போது அதை பர்மன் தற்போது முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply