7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

7,500 பள்ளிகளில் அடுத்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

மேலும் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான அனைத்து வகுப்பு அறைகளும் இந்த மாத இறுதிக்குள் கணினிமயமாக்கப்படும் என்றும், இந்தாண்டு தேர்வு எழுதி வெற்றி பெறாத மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் மூலம் அல்லாமல் பழைய பாடத்திட்டத்தின் மூலமாக தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த தனியார் கல்லூரி அரங்கில் காஞ்சிபுரம்,சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருச்சி,பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 704 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஓராண்டு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply