சென்னையில் நேற்று புத்தாண்டு தினத்தில் பிறந்த 75 குழந்தைகளுக்கு சென்னை ரோட்டரி கிளப்  நினைவு பரிசு வழங்கியதாக கிளப்பின் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை எக்மோரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 40 குழந்தைகள் மற்றும் கஸ்தூரிபாய் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பில் பரிசுகள் நேற்று வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழந்தைக்கும் தலையணையுடன் கூடிய குழந்தை படுக்கை, கொசுவலை, உடைகள் , தொப்பி, சாக்ஸ் மற்றும் குழந்தை பெற்ற தாயாருக்கு நைட்டி ஆகியவைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழந்தைக்கு கொடுத்துள்ள புத்தாண்டு பரிசுகளின் மதிப்பு ரூ.900ஆகும்.

எஸ்.எஸ். சுப்பிரமணியம் இதுகுறித்து தெரிவிக்கையில் ‘ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ரோட்டரி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு வழங்குவது வழக்கம். அதுபோலவே இந்த ஆண்டும் 75 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியதாக தெரிவித்தார். இதுபோலவே பொங்கல் திருநாள் மற்றும் குடியரசு தினங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply