சான்பிராசிஸ்கோ நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 70 ஊழியர்களின் பாஸ்போர்ட்டுக்கள் திருடு போனதாக அதிர்ச்சி ஒன்று சான்பிராசிஸ்கோ நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
சான்பிராசிஸ்கோநகரில் உள்ள Indian Consulate in San Francisco என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பாஸ்போர்ட், விசா ஆகியவைகளை நேற்று முன் தினம் திருடு போனதாக தெரிகிறது. அந்த பாஸ்போர்ட்டுக்கள அனைத்தும் இதுவரை வேறு யாரும் உபயோகிக்கப்படவில்லை எனினும் எதிர்காலத்தில் வேறு யாரும் அந்த பாஸ்போர்ட்டுக்களை தவறாக உபயோகப்படுத்தாத வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கையாக திருட்டு போன அனைத்து பாஸ்போர்ட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது.
திருடு போன அனைத்து பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சான்பிராசிஸ்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.