70 வயது ரஜினியை 17 வயதாக காண்பிப்பது தேவையா முருகதாஸ்?

ஒரு நடிகரை இளமையாக காண்பிக்க வேண்டியது ஒரு இயக்குனரின் கடமை என்பது தெரிந்ததுதான். ஆனால் அதற்காக 70 வயது ரஜினியை 17 வயது இளைஞராக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று ரசிகர்கள் தற்போது கிண்டலடித்து வருகின்றனர்

இன்று வெளியாகியுள்ள தர்பார் படத்தில் ரஜினி இளமையாகவும் ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்கிறார் என்பது உண்மைதான். இருப்பினும் ரஜினிக்கு 70 வயது என்பது நம்முடைய எல்லோருடைய மனதிலும் பதிந்த ஒரு விஷயத்தை மறக்கடிக்க முடியுமா?

இந்த நிலையில் அவரை இளமையாக காண்பிப்பதை விட அவருடைய வயதுக்கு ஏற்ற கேரக்டரில் அவரை நடிக்க வைக்கலாமே? முருகதாஸ் ஏன் அந்த முயற்சி எடுக்கவில்லை? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

70 வயதில் ஆட்டம் பாட்டம் டான்ஸ் ரொமான்ஸ் இதெல்லாம் தேவையா? ஹிந்தியில் அமிதாப்பச்சன் தனது வயதுக்கேற்ற கேரக்டர்களை ஏற்று நடித்து வருவது போல் ரஜினியும் அதேபோல் செய்யலாமே? என்று அவரது உண்மையான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *