7 பேருக்கு மட்டுமே கொரோனா .. சுகாதாரத்துறை அறிவிப்பு!

7 பேருக்கு மட்டுமே கொரோனா .. சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று மிக வேகமாக பரவியது என்பதும் அதன் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது ஒற்றை இலக்கத்தில் தான் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 பேருக்கு கொரோனா பரவியதாகவும் 12 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 62 என அறிவிக்கப்பட்டுள்ளது.