7 நாட்கள் கூட குழந்தை உணவு, தண்ணீரின்றி இருக்கும்: டாக்டர் விளக்கம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சூர்ஜித் என்ற குழந்தையை மீட்க கடந்த 60 மணிநேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் குழந்தை இத்தனை மணி நேரம் உயிருடன் இருக்க வாய்ப்பு உண்டா? உணவு தண்ணீர் இல்லாமல் ஒரு குழந்தை எத்தனை மணி நேரம் உயிரோடு இருக்க முடியும்? என்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டு மீட்பு பணிகள் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதாக வதந்திகள் பரவி வருகிறது

ஆனால் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மீட்புப் பணிகள் நிறுத்தப் போவதில்லை என்றும் குழந்தையை காப்பதற்கு இறுதிவரை முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

இந்த நிலையில் ஒரு குழந்தையால் எத்தனை நாட்கள் உணவு தண்ணீரின்றி உயிருடன் வாழ வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர் ஒருவர், ‘அதை சரியாக கணிக்க முடியாது என்றும், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்றும், ஆனால் நாங்கள் ஏழு நாட்கள் கூட உணவு தண்ணீரின்றி இருந்த குழந்தையை பார்த்திருக்கிறோம் என்றும், அதனால்தான் மீட்பு படையினர் இவ்வளவு தீவிரமாக குழந்தையை மீட்க முயற்சித்து வருகின்றனர் என்றும் கூறினார்.

எனவே மூன்று நாட்கள் ஆனாலும் குழந்தை உயிருடன் இருக்கும் அதிசயம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் கூறியுள்ளார் அவரது இந்த நம்பிக்கையை வைத்து தான் இன்னும் படையினர் சோர்வின்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply