7 வருடமில்லை, ஆயுள் முழுவதும் செல்லும்: TET தேர்வு சான்றிதழ் குறித்த அறிவிப்பு

டெட் என்னும் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் இதுவரை 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் இனி டெட் என்னும் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் இதுகுறித்து கூறியபோது 7 ஆண்டுகள் வரை சான்றிதழ்கள் செல்லும் என்ற முறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் அதில் கிடைக்கும் சான்றிதழ் செல்லுபடியாகும் என அறிவித்துள்ளார்.

டெட் தேர்வு, ஆசிரியர்கள், சான்றிதழ்,