7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை அளித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை சிறுமி கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அருகே மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சந்தோஷ்குமாரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று காலை சந்தோஷ்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply