இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து இந்திய அணி 330 என்ற இலக்கை நோக்கிய விளையாடிய நிலையில் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

மிக அபாரமாக விளையாடிய சாம் கர்ரன் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

இந்த நிலையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது என்பதும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *