7 பேர் விடுதலை வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரரசன் உள்பட 7 தமிழர் விடுதலைக்கான தீர்மானம் குறித்து நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

7 பேர்களை விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் இதுகுறித்து கவனர் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘தீர்மானம் மீது முடிவெடுப்பது குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Leave a Reply