நாக்பூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நேற்று மீண்டும் ஆஸ்ட்ரேலியாவின் 350 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி வெற்றி கண்டது, மீண்டும் ரோகித் சர்மா, தவான், வீரத் கோலி மூவர் கூட்டம் சாதனை புரிந்துள்ளது. இந்தப்போட்டியில் இந்தியாவும், கோலியும் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

தவான் நேற்று எடுத்தது 4வது ஒருநாள் சதம்! 24 இன்னிங்ஸ்களில் அவர் 1000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் கோலியுடன் இவர் இணைகிறார்.

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 350+ ரன்கள் இலக்கில் இது வரை எந்த அணியும் 2 முறை துரத்தியதில்லை. அதுவும் ஒரே தொடரில் இருமுறை 350+ ரன்களை எந்த அணியும் துரத்தியதாக வரலாறு இல்லை.

வீரத் கோலியின் 17 சதங்களில் 11 சதங்கள் இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற உதவி புரிந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை கோலி தொடர்ந்து 5வது முறையாக எடுத்துள்ளார்.

கோலி இந்த ஆண்டில் 1000 ரன்களைக் கடந்துள்ளார். இந்த ஆண்டில் 27 ஆட்டங்களில் விளியாடி 4 சதம், 5 அரைசதங்கள் உட்பட 1033 ரன்கள் எடுத்துள்ளார் கோலி.

இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்களில்…

2வது இடத்தில் இருந்த கங்கூலியை (146 ஆட்ட்டம்) பின்னுக்குத் தள்ளி தோனி அந்த இடத்திற்கு வந்தார். தோனி இதுவரை 147 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார் இதில் 85 வெற்றி 50 தோல்வி, 3 டை, 9 தோல்வி.

17 ஒருநாள் சதங்களை மிக விரைவில் எடுத்ததில் கோலி முதலிடம் பிடித்துள்ளார். கோலி 112 இன்னிங்ஸ்களில் இதனை நிகழ்த்தியுள்ளார். கங்கூலி 170 இன்னிங்ஸ்களில் 17வது சதத்தையும், சயீத் அன்வர் 177 இன்னிங்ஸ்களிலும் 17வது சதத்தை எடுத்துள்ளனர்.

துரத்தலில் சச்சின் டெண்டுல்கர்தான் அதிக சதம் எடுத்துள்ளார் சச்சின் எடுத்துள்ளது 17 சதங்கள். கோலி 11

சதங்கள். கிறிஸ் கெய்லும் 11 சதங்கள். கோலியின் 11 துரத்தல் சதங்களில் இந்தியா 5-இல் வெற்றி பெற்றுள்ளது. சச்சின் துரத்தலில் 14 சதங்கல் வெற்றியில் முடிந்துள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 1000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் எடுக்கும் 2வது வீரரானார் தோனி. தோனிக்கு 29 இன்னிங்ஸ் ஆனது. ஆனால் சச்சினுக்கு வெறும் 20 இன்னிங்ஸ்கள்தான்!

அதேபோல் வெற்றிகரமான துரத்தலில் 34வது முறையாக தோனி நாட் அவுட்டாக இருந்துள்ளார். இந்த விஷயத்திலும் ஜாண்டி ரோட்ஸை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்தியாவின் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் துவக்க ஜோடியாகும். இருவரும் 18 இன்னிங்ஸ்களில் 1068 ரன்களை 62.82 என்ற சராசரியில் பெற்றுள்ளனர்.இவர்கள் இருவரும் 5 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த ஒரு ஜோடியும் இந்த 5 சத கூட்டணிகளை அமைத்ததில்லை.

Leave a Reply