சென்னையில் வேரோடு சாயந்த 65மரங்கள்.. மீட்புப்பணிகள் தீவிரம்

சென்னையில் வேரோடு சாயந்த 65மரங்கள்.. மீட்புப்பணிகள் தீவிரம்

மாண்டஸ் புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில் சென்னையில் சுமார் 65 மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும், அந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு சுமர் 10 மணிக்கு மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர் வேரோடு சாய்ந்த 65 மரங்களை மீட்பு படையினர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விடிய விடிய பணியாற்றி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்புப்பணிகள் நடந்ததாகவும் தற்போது முழு அளவில் மீட்புப்பணிகள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.