610 அரசியல் கட்சிகள் ஜீரோ: ஒரு அதிரச்சி தகவல்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 610 அரசியல் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் ஜீரோவாக இருப்பதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில், 610 கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இவற்றில் 80 கட்சிகள் ஒரு சதவீதம் அல்லது அதற்கு குறைந்த வாக்கு சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 530 கட்சிகள் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறவில்லை.

ஜீரோவில் உள்ள கட்சிகள் பட்டியலில் நம்மூரில் உள்ள நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி உள்பட ஒருசில கட்சிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply