shadow

கோயில் குருக்களின் மகள்

திருவள்ளூரில் உள்ள ராகவேந்திரா கோவிலில் பூஜை செய்யும் குருக்கள் ஒருவரின் மகள் சமீபத்தில் முடிந்த பிளஸ் டு தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மொழி பாடத்தில் 98 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் மற்ற அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்களை இந்த மாணவி எடுத்துள்ளார்.

இந்த மாணவியின் உயர்படிப்பிற்கு தான் நிதியுதவி செய்வதாகவும், மற்றவர்களும் முடிந்தளவு இந்த மாணவிக்கு உதவ வேண்டும் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

600க்கு 597 மதிப்பெண்கள் பெற்ற இந்த மாணவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *