60 கிமீ வேகத்தில் சென்ற காரில் அசந்து தூங்கிய டிரைவர்!

அமெரிக்காவில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார் ஒன்றில் அந்த காரின் டிரைவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஆனால் அந்த கார் தானியங்கி கார் என்பதால் எந்த விபத்தும் நேரவில்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த கார் தானியங்கி காராக இருந்தாலும் ஓட்டுநர்கள் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தானியங்கி என்பதால் டிரைவர்கள் அசந்து தூங்கும் அளவுக்கு பாதுகாப்பாக நினைக்கக் கூடாது என்றும் இந்த காரின் நிறுவனம் தெரிவித்துள்ளது

அதே நேரத்தில் ஓட்டுநரின் செயல்பாடு நீண்ட நேரம் அமைதியாக இருந்தால் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்து அவர்களை விழிப்படையச் செய்யும் வகையில் இதில் டெக்னாலஜி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply