60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தவறு செய்யும் திமுக: பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

60 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்களை உசுப்பேற்றி ஆட்சியைப் பிடித்தது போல் தற்போது மீண்டும் திமுக மாணவர்களின் உதவியால் ஆட்சியைப் பிடிக்கலாம் என கனவு காண்கிறது என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்

கடந்த 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திமுக கட்சி அந்த சமயம் மாணவர்களைக் கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்தது. குறிப்பாக இந்தி மொழி எதிர்ப்பிற்கு மாணவர்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். அதனால்தான் அந்த கட்சியை 1967ல் ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் முதல்வராக இருந்த காமராஜர் கூட மாணவர் ஒருவரால்தான் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 60 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மாணவர்களை குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் உசுப்பேற்றி ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறி உள்ளார். ஆனால் மாணவர்களின் ஆதரவு திமுகவில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply