சவுக்கு சங்கருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை: நீதிமன்றம் அதிரடி

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை: நீதிமன்றம் அதிரடி

நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று தெரிவித்த சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு அளித்தது.

ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என சவுக்கு சங்கர் கூறியதை அடுத்து அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும் சமூக வலைதளங்களில் இருந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செய்யுமாறு வெளியிட்ட பதிவுகளை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.