அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் கட்

முதல்வர் அதிரடி நடவடிக்கை

மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் 6 நாட்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமான சம்பளம் பெறுபவர்களின் 6 நாட்கள் சம்பளம் வரும் 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் அதாவது மே முதல் செப்டம்பர் வரையிலான சம்பளத்தில் ஆறு நாட்கள் சம்பளம் கட் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதில் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் அடங்கும் என்பதால் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply