சென்னை அண்ணா சாலையில் அச்சுறுத்திய இளைஞர்கள்: பெரும் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையில் நடந்து சென்றவர்களை பிளாஸ்டிக் பைப்புகளை கொண்டு அச்சுறுத்திய 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பயமுறுத்தும் வகையில் சென்ற இளைஞர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை அண்ணா சாலையில் இரண்டு பைக்குகளில் சென்ற இளைஞர்கள் 6 பேர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் பைப்புகளை சாலையில் தேய்த்து சத்தம் எழுப்பிக்கொண்டு சென்றனர். இளைஞர்களின் இந்த செயலால் அண்ணா சாலையில் நடந்து செல்பவர்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோவை ஆதாரமாகக் வைத்து அடுத்த சில நிமிடங்களில் அண்ணாசாலை காவல்துறையினர் 6 இளைஞர்களையும் கைது செய்தனர். திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த முத்து, புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், விஜி, நவீன் குமார் உள்ளிட்டோர்தான் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply