23 வயது இளம்பெண்ணின் தலைக்கு ரூ.6.7 கோடி விலை வைத்த ஐ.எஸ். இயக்கம்

23 வயது இளம்பெண்ணின் தலைக்கு ரூ.6.7 கோடி விலை வைத்த ஐ.எஸ். இயக்கம்

டென்மார்க்கில் குடியுரிமை கொண்டு வாழ்ந்து வரும் ஈரான் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரின்  தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.6.7 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இவர் ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் குறிப்பாக டென்மார்க்கில் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஐ.எஸ் இயக்கத்தினர் பெண்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகளையும் வெளிச்சம் காட்டி வருகிறார். இவர்  பெயர்  ஜோன்னா பலனி என்றூம் இவருக்கு 23 வயது என்றும் ஐ.எஸ் அறிவித்துள்ளது

இந்தநிலையில் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு டென்மார்க்கைவிட்டு பலனி சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறியதால் சிரிய எல்லையில் கைது செய்யப்பட்ட அவர் டென்மார்க் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கதிற்கு ஏதிராக செயல்படும் ஜோன்னா பலனியை கொலை செய்து அவர்து தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.6.7 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டென்மார்க்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.