6 தவணைகளில் கல்விக்கட்டணம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடமிருந்து கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் 75% மட்டும் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

கொரோனாவால் வருமானம் பாதித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணமும், வருமானம் பாதிக்காத பெற்றோர்களிடம் 85 சதவீத கட்டணம் பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் இந்த 75 சதவீத கட்டணத்தை 6 தவணைகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் படிப்படியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்

மேலும் கட்டணத்தை காரணமாக கூறி மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றுவது அல்லது ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்க படாமலும் இருக்க கூடாது என்றும் அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.