மகராஷ்டிர மாநிலத்தில் தனது உண்ணாவிரதத்தை ஐந்தாவது முறையாக துவங்கியுள்ள அன்னா ஹசாரே, காங்கிரஸ் கட்சி லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதாக கூறி மக்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரே இன்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.

அவரது சொந்த ஊரான மகராஷ்டிர மாநிலம் ராலேகான்சித்தியில் இந்த உண்ணாவிரதத்தை துவங்கிய அவர் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதாக பலமுறை கூறிய மத்திய அரசு இதுவரையில் அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

இன்று காலை வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்ட 76 வயது ஹசாரே அங்குள்ள யாதவ்பாப கோவில் அருகே தனது உண்ணாவிரதத்தை துவங்கினார்.

இதற்கிடையே லோக் மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply