அமெரிக்காவின் ஒக்லஹாமா என்ற நகரை சேர்ந்த ஒருவர் தொலைக்காட்சியில் மிகவும் மும்முரமாக கால்பந்து போட்டியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது குழந்தை அழுது தொந்தரவு செய்துகொண்டிருந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி எறிந்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் ஒக்லஹாமா என்ற நகரை சேர்ந்த 22 வயது மார்க்கெஸ் வாக்கர் என்பவர் ஒரு கால்பந்து பிரியர். நேற்று முன் தினம் University of Oklahoma vs. Oklahoma State football team ஆகிய இரு அணிகளுக்கு நடந்த விறுவிறுப்பான கால்பந்து போட்டியை தொலைக்காட்சியில் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய ஐந்து மாத குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்தது. வீட்டில் அவருடைய மனைவியும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த வாக்கர், குழந்தையை தூக்கி எறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த அறையில் விழுந்த குழந்தை தலையில் அடிபட்டு, காதுகள் வழியே ரத்தம் வந்து இறந்துவிட்டது.

இதையறிந்த பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனே காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வந்தபோது குழந்தை இறந்து கிடந்தது. பின்னர் வாக்கரிடம் நடந்த விசாரணையில் குழந்தையை ஆத்திரத்தில் கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Leave a Reply