ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் இடஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கு 5 சதவிகித மதிப்பெண் சலுகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் நேற்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என்ற சட்டசபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த முதல்வர் இந்த அறிவிப்பினை நேற்று சட்டசபை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவிகித மதிப்பெண் பெறவேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கூறியுள்ளது. முதல்வரின் அறிவிப்பால் இனி இடஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்களை பெற்றாலே அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

இந்த சலுகை கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு ஆசிரியர் தேர்வு எழுதிய இடஒதுக்கீட்டு பிரிவினர் நன்றி தெரிவித்துள்ளனர்

 

Leave a Reply