குரங்கு துரத்தியபோது தப்பித்து ஓடிய பெண் மாடியில் இருந்து கீழே விழ்ந்து பலி!

குரங்கு துரத்தியபோது தப்பித்து ஓடிய பெண் மாடியில் இருந்து கீழே விழ்ந்து பலி!

மொட்டை மாடியில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை குரங்குகள் துரத்தியதால் அவர் தப்பிக்க ஓடிய போது அவர் பரிதாபமாக மாடியிலிருந்து கீழே விழுந்து பலியானார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 57 வயது ஒரு பெண் ஒருவர் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கூட்டமாக வந்த குரங்குகள் அவரை தாக்க முயன்றது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது அவர் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்

படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.