5000ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை: 123 நாடுகளில் கொரோனா என தகவல்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும், இத்தாலியில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆக ஒரே நாளில் உயர்ந்துள்ளது என்பதும் மேலும் ஒரு அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176லிருந்து 1,26,139 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது என்பதும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக உயர்ந்துள்ளது என்றும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது

Leave a Reply