சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் குறித்த தகவலை சென்னை மாநகராட்சி சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இதன்படி ராயபுரம் மண்டலத்தில் 4821 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டையார்பேட்டை- 3781, தேனாம்பேட்டை- 3464, கோடம்பாக்கம்- 3108, அண்ணாநகர்- 2781, திரு வி.க.நகர்-2660 என கொரோனா பாதிப்பு உள்ளது.

அதேபோல் அடையாறு- 1607, வளசரவாக்கம்-1268, திருவொற்றியூர்-1072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையின் 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 28,924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply